சென்னை திருவெற்றியூர் பொது வர்த்தகர் சங்கம் சார்பில் பொதுக்குழு வெள்ளிவிழா காணும் வணிகர்களுக்கு பாராட்டுவிழா கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா தலைவர் திரு வி.இராமசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் துணைச் செயலாளர் ஜி.ஸ்டாலின் வரவேற்புரையும் காப்பாளர் எஸ்.நளராஜன், துணைத் தலைவர் ஏ.எஸ்.கனி துணைத் தலைவர் மா.இராஜசேகர் முன்னிலையிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பொதுச்செயலாளர் இரா.முருகேசன் அவர்கள் ஆண்டறிக்கை, புதிய தீர்மானங்கள் தாக்கல் செய்தார். அதன் பின் பொருளாளர் ந.இராசேந்திரன் அவர்கள் வரவு - செலவு கணக்கு தாக்கல் செய்தார்.
இந்நிகழ்ச்சியின் வெள்ளிவிழா காணும் வணிகர்களுக்கு பாராட்டுமடல் மற்றும் சங்க உறுப்பினர் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்கத்தொகையை கௌரவ தலைவர் திரு ஜி.வரதராஜன் மற்றும் கௌரவ ஆலோசகர் A.நாராயணன் அவர்கள் வணிகர்களுக்கு வழங்கினார்கள்.
இதில் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.